வெற்றிமாறன் –சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த வாடிவாசல் திரைப்படம் தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாகி வருகிறது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் வடசென்னை படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தின் தலைப்பு அரசன் என்று சில நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில் நுட்ப விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று ஷூட் செய்யப்பட்டது.
அது அக்டோபர் 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளிலும் இணையத்திலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட நிலையில் UA சான்றிதழ் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த முன்னோட்ட காணொளி 5 நிமிடம் 33 வினாடிகள் ஓடும் அளவுக்கு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.