வேலை நாளில் வீழ்ச்சியை சந்தித்த கவினின் ‘மாஸ்க்’ படத்தின் வசூல்!

vinoth
செவ்வாய், 25 நவம்பர் 2025 (17:34 IST)
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இதனால் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் விடுமுறை நாட்களிலும் பெரிதாக வசூலில் முன்னேற்றம் இல்லை. படம் மூன்று நாட்களில் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ரிலீஸான எந்த படமும் பெரியளவில் வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று விடுமுறை முடிந்து வேலைநாளான திங்கள் கிழமையில் படத்தின் வசூல் 70 சதவீதம் குறைந்துள்ளது. நேற்று இந்த படம் 31 லட்ச ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

வேலை நாளில் வீழ்ச்சியை சந்தித்த கவினின் ‘மாஸ்க்’ படத்தின் வசூல்!

ரஜினி படத்தில் ‘பார்க்கிங்’ இயக்குனருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இதுதான் வளர்ச்சி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments