காந்தாரா படம் பெற்ற பெருவெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் காந்தாரா-1 உருவாகி ரிலீஸாகவுள்ளது. படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தில் காந்தாரா தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்பட்டுள்ளது.
படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் படத்தின் முன்னோட்டம் ஐந்து மொழிகளில் ரிலீஸானது. முதல் பாகத்தில் காந்தாராவாக மறைந்த கதாநாயகனின் மகன் அப்பா ஏன் அப்படி மறைந்து போனார் எனக் கேட்க அதற்கு விடை கூறுவது போல பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதையாக விரிகிறது டிரைலர். டிரைலர் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் பெரிய அளவில் தமிழக ரசிகர்களைக் கவரவில்லை என்பதுதான் நிதர்சனம்.
இதனால் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள்தான் கையைப் பிசைகிறார்களாம். ஏனென்றால் காந்தாரா திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 36 கோடி ரூபாய்க்கு மண்டல ரீதியாகப் பிரித்து விற்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூலித்தால்தான் விநியோகஸ்தர்கள் லாபம் சம்பாதிக்க முடியுமாம். ஆனால் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கே அவ்வளவு பெரிய வசூல் கிடைப்பதில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.