தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகப் ப்ரதீப் அடைந்திருக்கும் வளர்ச்சி அளப்பரியது. அவர் நடித்த முதல் மூன்று படங்களும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன. இது மற்ற எந்த நடிகர்களுக்கும் அமையாத ஒரு தொடக்கமாகவுள்ளது. அதே போல அவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படமும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
இந்த அடுத்தடுத்த வெற்றிகள் மூலமாக ப்ரதீப் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். இது தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் மற்ற எந்த இளம் நடிகர்களுக்கும் அமையாத வெற்றியாக உள்ளது.
இந்நிலையில் ப்ரதீப்பின் சக நடிகரான கவின் அவர் குறித்துப் பேசும்போது “நான் ப்ரதீப்பை ஒரு ஸ்டாராகதான் பார்க்கிறேன். தொடர்ந்து 3 படங்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்வது சாதாரணம் இல்லை. கதை, கேரக்டர் உள்ளிட்ட விஷயங்கள் சரியாக திட்டமிட்டப் பட்டால்தான் அது சாத்தியம். அதனால் அதை வெறுமென அதிர்ஷ்டம் என சொல்லமுடியாது” எனக் கூறியுள்ளார்.