கவின் –ஆண்ட்ரியாவின் ‘மாஸ்க்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான விவரம்!

vinoth
சனி, 22 நவம்பர் 2025 (09:49 IST)
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் நேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

முதல் பாதி முழுக்க கதையைப் பற்றிக் கவலைப்படாமல் கவின் மற்றும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரங்களை விளக்கும் காட்சிகளாக நகைச்சுவையாக(?) நகர்கின்றன. இடைவேளைக் காட்சி ஊறுகாயைக் கடித்தது போல சிறு விறுவிறுப்பைத் தந்து, இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. மொத்தத்தில் ஒரு சராசரியான படமாக ‘மாஸ்க்’ உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘மாஸ்க்’ படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. ஆன்லைன் டிராக்கிங் தளமான sacnilk வெளியிட்டுள்ள தகவலின் படி முதல் நாளில் 1 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருக்கலாம் என அறிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த படம் வசூலிப்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி நிலவரம் தெரியவரும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்க்கு சொன்ன கதையைதான் ரஜினிக்காக பட்டி டிங்கரிங் பார்க்கிறாரா ஆர் ஜே பாலாஜி?

வாட்ஸ் ஆப்பில் மோசடி… செல்ஃபோன் எண்ணைப் பகிர்ந்த உஷாராக்கிய ஸ்ரேயா!

ரஜினி படத்துக்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதா?... தயாரிப்பாளர் கமல் சொன்ன பதில்!

அரசன் படத்தில் ‘வடசென்னை’ சந்திரா… உறுதி செய்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments