Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரமுத்து மீதான பாலியல் புகார் ; எதிர்பாராத அதிர்ச்சி : கஸ்தூரி டிவிட்

Advertiesment
வைரமுத்து மீதான பாலியல் புகார் ; எதிர்பாராத அதிர்ச்சி : கஸ்தூரி டிவிட்
, புதன், 10 அக்டோபர் 2018 (15:32 IST)
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து நடிகை கஸ்தூரி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

 
கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், இதுபற்றி நடிகர் கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான் பேச கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தமிழையும் பெண்ணியத்தையும் மட்டுமே பகிர்ந்துகொண்டார். தவிர, அவரைப்பற்றி பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன். ஒரு எதிர்மறையான கருத்தும் இதுவரை என் காதுக்கு எட்டியதில்லை. அண்ணாந்து பார்த்த ஒருவர் மீது சரமாரியாக புறப்பட்டு வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிர்பாராத அதிர்ச்சியே. ஒப்புக்கொள்கிறேன்.
 
சின்மயியும் எனக்கு நல்ல தோழியே ஆவார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒருங்கே அமைந்த துணிவுள்ள பெண். அவர் முன்னெடுத்துவைக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் வன்மையானவை. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபிறகே சின்மயி பேச தொடங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கிறேன். 
 
இந்த சிக்கலான விஷயத்தில் சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு திரு வைரமுத்து அவர்கள் பதில் சொல்லும்வரை வெறும் பார்வையாளரான நமக்கு அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்லும் தகுதியோ உரிமையோ இல்லை என்று கருதுகிறேன்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்கார் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு