Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவிட்சர்லாந்தில்....அறையில் காத்திருந்த வைரமுத்து - சின்மயி அதிர்ச்சி தகவல்

Advertiesment
சுவிட்சர்லாந்தில்....அறையில் காத்திருந்த வைரமுத்து - சின்மயி அதிர்ச்சி தகவல்
, புதன், 10 அக்டோபர் 2018 (11:09 IST)
கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
18 வயது இருக்கும் போது பயிற்சிக்காக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற போது அவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் மற்றும் மற்றொரு பெண்ணும் ஏற்கனவே கூறியிருந்த புகார் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், ஏற்கனவே, சினிமா விமர்சகர் பிரசாந்த் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி, வைரமுத்து பற்றிய சில தகவல்கள் வெளியிட்டுள்ளார்.
webdunia

 
ஒரு முறை சுவிட்ஸர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து எனது அறையில் நானும், எனது தாயும் மட்டுமே இருந்தோம். அப்போது, நிகழ்ச்சி அமைப்பாளர் என்னிடம் வந்து வைரமுத்து அவரின் அறையில் எனக்காக காத்திருப்பதாக கூறினார். இது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் என ஒரு பதிவிலும், வைரமுத்து பற்றி அவரின் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும். வைரமுத்து சார் நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்களுக்கு தெரியும். சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை” என ஒரு டிவிட்டிலும் அவர் பதிவிட்டுள்ளார்.
 
ஆனால், இதில் சில பதிவுகளை அவர் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கவிஞர் வைரமுத்து மீது நாளுக்கு நாள் பாலியல் புகார்கள் அதிகரித்து வருவது திரையுலகில் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபரேஷன் கோபால் - ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன?