Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

vinoth
வெள்ளி, 6 ஜூன் 2025 (13:30 IST)
தமிழ் சினிமாவில் அறியப்படும் இயக்குனராக இருப்பவர் கரு பழனியப்பன். அவர் இயக்கிய பார்த்திபன் கனவு, சதுரங்கம் மற்றும் மந்திரப் புன்னகை உள்ளிட்ட படங்கள் கவனம் ஈர்த்த படங்களாக அமைந்தன. அதன் பின்னர் நடிகராக அறிமுகமான கரு பழனியப்பன் அதிலும் முத்திரைப் பதித்தார்.

தற்போது திராவிட இயக்க ஆதரவாளராக திமுக பேச்சாளராக பல நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் கரு பழனியப்பன் தன்னுடைய பெரிய தந்தையும் தமிழக அரசியலில் நன்கறியப்பட்டவருமான பழ கருப்பையா குறித்து ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அதில் “நான் எங்கள் சாதியில் இல்லாமல் வேறொரு சாதியில் கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் என் உறவினர்களோடு என்னை நெருங்க விடாமல் சாதி ரீதியாக ஒடுக்குகிறார் பழ கருப்பையா. என் குடும்ப வட்டாரத்தில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களையும் அவர் மறைமுகமாக வெளியேற்றுகிறார்.” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரையும் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம்சேஞ்சர் படுதோல்வி… மீண்டும் இணையும் தில் ராஜு & ராம்சரண்!

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் இவரா?... வெளியான தகவல்!

கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன் லாலின் மகள் விஸ்மயா!

முடிந்தது இராமாயணம் முதல் பாக ஷூட்டிங்! படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரன்பீர்!

மாரி செல்வராஜ் ஷாருக் கானை வைத்துப் படம் இயக்க வேண்டும்- இயக்குனர் ராம் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments