Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Advertiesment
வைரமுத்து

vinoth

, வெள்ளி, 6 ஜூன் 2025 (12:34 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய மலரும் நினைவுகளை முகநூல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த உரை புத்தகத்துக்கு “வள்ளுவர் மறை, வைரமுத்து உரை’ எனத் தலைப்பு வைத்துள்ளார். திருக்குறளுக்கு பரிமேலழகர் முதல் கலைஞர் வரை பலர் உரை எழுதி இருந்தாலும் இன்னும் அதில் எழுதுவதற்கு விஷயம் உள்ளது என்பதால் இந்த புத்தகத்தை எழுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த புத்தகம் ஜூலை 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!