“எங்க அண்ணனுக்காக நான் எழுதிய பயோபிக் கதை…” சூர்யாவை இயக்க ஆசைப்படும் கார்த்தி!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:14 IST)
நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தை அவரின் அண்ணனான சூர்யா தயாரித்துள்ளார்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை மதுரையில் நடந்தன.

இதையடுத்து சென்னையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி தனது அண்ணன் நடிகர் சூர்யாவை இயக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். அதில் “நான் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி முடித்தவுடன், அண்ணனுக்காக ஒரு பயோபிக் கதையை எழுதினேன். அதை படமாக்குவது என்னுடைய கனவு” எனக் கூறியுள்ளார்.

சூர்யா நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனால் அந்த பாதையில் செல்லாமல் பருத்திவீரன் படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

வேலை நாளில் வீழ்ச்சியை சந்தித்த கவினின் ‘மாஸ்க்’ படத்தின் வசூல்!

ரஜினி படத்தில் ‘பார்க்கிங்’ இயக்குனருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இதுதான் வளர்ச்சி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments