Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘கைதி 2’ தள்ளிப் போவதால் சுந்தர் சி யுடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி!

Advertiesment
அஜித்

vinoth

, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (08:16 IST)
தமிழ் சினிமாவில் ஒரு  வணிக இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். முன்னணி நடிகர்கள் இல்லாமல் திரைக்கதையின் பலத்தால் உருவாக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின்னர் லோகேஷின் சினிமா கிராஃப் ஏற்றத்தை மட்டும்தான் கண்டுள்ளது.  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்க அந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகிப் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களாக வரத் தொடங்கியுள்ளன. தற்போது வரை 500 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லோகேஷ் அடுத்து கைதி 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ‘கைதி 2’ படம் மீண்டும் தாமதமாகவுள்ளதாக தெரிகிறது. அதனால் அந்த படத்துக்காக ஒதுக்கிய தேதிகளில் கார்த்தி, சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 47 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுஷின் ஷ்யாம்!