Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆயிரத்தில் ஒருவன் ரி ரிலிஸ்… மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட கார்த்தி!

Advertiesment
ஆயிரத்தில் ஒருவன் ரி ரிலிஸ்… மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட கார்த்தி!
, புதன், 30 டிசம்பர் 2020 (17:21 IST)
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது குறித்து நடிகர் கார்த்தி ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் மிக இளம் வயதிலேயே இளைஞர்களாலும் தீவிர சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்படும் திரைப்படங்களை எடுத்தவர். ஆனால் அவர் இயக்கி கடைசியாக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் என்றால் அது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்தான். அதற்குப் பிறகு 10 ஆண்டுகளாக அவர் வெற்றிப் படங்களே கொடுக்கவில்லை.

இந்நிலையில் இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கொரோனா அச்சத்தால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. அதனால் அவர்களைக் கவரும் விதமாக செல்வராகவனின் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாக உள்ளதாம். இந்நிலையில் தனது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 10 ஆண்டுகள் கழித்து வெளியாவது குறித்து மகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கார்த்தி.

அந்த வீடியோவில் தனக்கு எப்படி அந்த படத்தின் வந்தது என்பதைப் பற்றியும் செல்வராகவனின் இயக்கம் மற்றும் ஜி வி பிரகாஷின் இன்று வரைக் கொண்டாடப்படுவது பற்றியும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் கார்த்தி. செல்வா ஒரு முக்கியமான இயக்குனர் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் எனக் கூறியுள்ளார். மேலும் 10 ஆண்டுகள் கழித்து அந்த படம் ரிலிஸாவதற்கு ரசிகர்களின் அன்புதான் காரணம் எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆத்துகாரருடன் அந்தரத்தில் பறந்து ஆட்டம் போடும் காஜல் அகர்வால்!