Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

vinoth
செவ்வாய், 10 ஜூன் 2025 (10:02 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டு அதில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் எஸ் ஜே சூர்யா பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி நடக்கவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments