Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்டி ஸ்டார் படமாக மாறும் பென்ஸ்… முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம்!

vinoth
செவ்வாய், 10 ஜூன் 2025 (09:58 IST)
லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய LCU உலகத்தில் இணைக்கும் விதமாக கதையை எழுதியுள்ளார் லோகேஷ். கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்டு விட்டாலும் தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நிவின் பாலி மற்றும் மாதவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதே போல கதாநாயகிகளாக பிரியங்கா மோகன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதற்கிடையில் தற்போது ஒரு முக்கிய வேடத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் பென்ஸ் திரைப்படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக மாறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

ன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வி சொல்லும் பாடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments