அவதார் 3 உடன் மோதும் கார்த்தியின் ‘வா வாத்தியார்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 8 அக்டோபர் 2025 (12:32 IST)
மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

நீண்டகாலமாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் அதன் பிறகு ரிலீஸ் பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. இந்நிலையில் இந்த படத்துக்காக இன்னும் 12 நாட்கள் ஷூட் நடத்த வேண்டும் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது கார்த்தி, தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ படத்துக்கு நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில் தற்போது ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி அவதார் 3 உலகமெங்கும் ரிலீஸாகும் நாளில் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் கமலுக்கும் நடந்த அந்த வாக்குவாதம்.. சீக்ரெட்டை உடைத்த மிஷ்கின்

ரிலீஸுக்கு முன்பே 315 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’!

இது அது இல்ல… ஜனநாயகன் பாடலை டீகோட் செய்து பகவந்த் கேசரி ரீமேக் என உறுதி செய்த ரசிகர்கள்!

லோகேஷ் & அருண் மாதேஸ்வரனின் ‘DC’ படத்தில் இணைந்த சஞ்சனா!

தொடங்கியது ‘கருப்பு’ படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments