Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் சம்பவத்தை காரணம் காட்டி ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு தடை!

Advertiesment
Jaganmohan Reddy

Prasanth K

, புதன், 8 அக்டோபர் 2025 (11:30 IST)

கரூரில் நடந்த கூட்டநெரிசல் சம்பவத்தை காரணம் காட்டி ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த சம்பவம் ஆந்திரா வரை எதிரொலித்து வருகிறது.

 

ஆந்திரா முன்னாள் முதல்வரும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, அனகாப்பள்ளி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றை திறந்து வைக்க நாளை செல்கிறார். இதற்காக விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்லும் ஜெகன்மோகனுக்கு அங்கு ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

பிரம்மாண்ட ரோடு ஷோவிற்காக ஏராளமான தொண்டர்களை கட்சியினர் திரட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜெகன்மோகன் ரோடு ஷோ நடத்தினால் கரூரில் நடந்தது போல அசம்பாவிதம் ஏற்படும் என சொல்லி அதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். ஆனால் யார் என்ன தடை விதித்தாலும் எங்கள் சாலை பயணம் தொடரும் என ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் முன்னாள் மந்திரி அமர்நாத் ரெட்டி கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தவெக மேல்முறையீடு..!