Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் கவனம் பெற்ற கார்த்தியின் ஜப்பான் பட டிரைலர்!

இணையத்தில் கவனம் பெற்ற கார்த்தியின் ஜப்பான் பட டிரைலர்!
, ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (08:06 IST)
2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படம் மூலமாக அறிமுகமான கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்துள்ளார். அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

இந்நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சிக்கு இடையில் ஜப்பான் படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலர் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரொம்ப நாள் கழிச்சு பிரம்மாண்டம் இல்லாத நடிப்பு! – சீயான் விக்ரம் 62 ப்ரோமோ!