Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபவளிக்கு முன்பே ரிலீஸாகும் கார்த்தியின் ஜப்பான்!

தீபவளிக்கு முன்பே ரிலீஸாகும் கார்த்தியின் ஜப்பான்!
, வியாழன், 26 அக்டோபர் 2023 (14:31 IST)
2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படம் மூலமாக அறிமுகமான கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்துள்ளார். அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு ஜப்பான் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே இந்த படம் ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு தீபாவளி ரிலீஸ் படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் நவம்பர் 10 ஆம் தேதியே ரிலீஸ் ஆகவுள்ளது என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் வெளியீடு வேண்டாம் என முடிவு செய்த சுந்தர் சி… அரண்மனை 4 ரிலீஸ் எப்போது?