Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் அடுத்த படத்தில் எம் ஜி ஆராக நடிக்கும் பிரபல நடிகர்!

கார்த்தியின் அடுத்த படத்தில் எம் ஜி ஆராக நடிக்கும் பிரபல நடிகர்!
, வியாழன், 26 அக்டோபர் 2023 (14:12 IST)
கார்த்தி இப்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தை முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் ஜப்பான் படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இதில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதாகவும், அவருக்குள் எம் ஜி ஆர் வந்துவிடுவது போன்ற சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாம். சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் எம் ஜி ஆர் ரசிகராக கார்த்தி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க, எம் ஜி ஆர் வேடத்தில் நடிகர் ஆனந்த் ராஜ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான் இசை வெளியீட்டில் கலந்துகொள்ளும் கார்த்தியுடன் பணியாற்றிய கலைஞர்களுக்கு அழைப்பு!