கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி தற்போது 20 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் வரும் 18 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒரு மாதத்திற்குப் பின்னரே ஓடிடியில் ரிலீஸாகி வரும் நிலையில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்னரே ரிலீசாவது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
சர்தார் திரைப்படம் நவம்பர் 18ஆம் தேதி ஆஹா ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது