Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

Advertiesment
கார்த்தி 29

vinoth

, புதன், 11 ஜூன் 2025 (10:03 IST)
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக ‘கார்த்தி 29’ எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. படத்தில் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நிவின் பாலி மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. பீரியட் படம் என்பதால் அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஜூன் 27 ஆம் தேதி காரைக்காலில் ஷூட் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பெரும்பகுதி காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!