தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களே ஆன நிலையில் அதன் துல்லியமான ப்ரிண்டை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் துல்லியமான ப்ரிண்ட்டை இணையத்தில் வெளியிட்டுள்ளது பிரபல பைரசி தளமான தமிழ் ராக்கர்ஸ். இது தனுஷ் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.