Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது பார்சல்… கர்ணன் படத்துக்கு குவியும் பாராட்டுகள்!

தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது  பார்சல்… கர்ணன் படத்துக்கு குவியும் பாராட்டுகள்!
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (13:59 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.

காலை முதலே படம் பார்த்தவர்கள் சமூகவலைதளங்களில் படத்தை புகழ்ந்து எழுதி வருகின்றனர். மேலும் அசுரனுக்கு ஒரு தேசிய விருது வாங்கியது போல கர்ணனுக்கும் மற்றொரு தேசிய விருதை தனுஷ் பெறுவார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கையில் வாளுடன் கிளம்பும் சூர்யா… சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புகைப்படம்!