Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு ரசிகர்களுக்குப் போட்டியாக....தனுஷ் ரசிகர்கள் புதிய சாதனை....

சிம்பு ரசிகர்களுக்குப் போட்டியாக....தனுஷ் ரசிகர்கள் புதிய சாதனை....
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (15:57 IST)
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் இன்று ரிலீசானது.  இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

நேற்று தான் தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது

இதனை அடுத்து இந்த கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு ‘கர்ணன்’ திரைப்படத்தை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த நிலையில் கோயம்பேடு ரோகிணி உள்ளிட்ட பல தியேட்டர்களில் இன்று அதிகாலையிலேயே இந்த படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பதும் கட்-அவுட் மற்றும் பட்டாசுகளை வெடித்து இந்த படத்தின் ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தனுஷ் ரசிகர்கள்  கர்ணன் படத்திற்கு நடுக்கடலில் கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள், மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2019  ஆம் ஆண்டு சிம்பு ரசிகர்கள் நடுக்கடலில் கட் அவுட் வைத்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ணன் - சினிமா விமர்சனம்