விரைவில் வெளியாக உள்ள காந்தாரா திரைப்படத்தை காண மக்கள் விரதம் இருந்து வர வேண்டும் என வெளியான அறிவிப்பு பொய்யானது என ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ல் வெளியாகி ஹிட் அடித்த படம் காந்தாரா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதையும் ரிஷப் ஷெட்டியே நடித்து இயக்கியுள்ளார். இந்த படம் அக்டோபர் 2 அன்று வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் பெரும் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் காந்தாரா பார்க்க வருபவர்கள் மது, புகை, மாமிசம் உள்ளிட்டவற்றை தவிர்த்து விரதமிருந்து வந்து படத்தை காண வேண்டும் என்றும், அவ்வாறு விரதம் மேற்கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள ரிஷப் ஷெட்டி “உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அது யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர். இது எங்கள் கவனத்திற்கு வந்தபோது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. படத்தின் வரவேற்பிற்கு இடையே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள சிலர் செய்யும் வேலைதான் இது. இதற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K