Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’காந்தாரா 1’ ஷூட்டிங்கின் அனைத்து நாட்களிலும் சைவ உணவு… படக்குழு செய்த செயல்!

vinoth
திங்கள், 29 செப்டம்பர் 2025 (16:18 IST)
காந்தாரா படம் பெற்ற பெருவெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் ‘காந்தாரா-1’ உருவாகி ரிலீஸாகவுள்ளது. படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தில் காந்தாரா தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐந்து மொழிகளில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதையடுத்துப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி ஈடுபட்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் காந்தாராவுக்காக தான் ஐந்து ஆண்டுகள் செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ‘காந்தாரா 1’ படம் பார்க்க வருபவர்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டுவிட்டு வரவேண்டும் என சொன்னதாக ஒரு போலியான போஸ்டர் பரவியது. ஆனால் அதைப் படக்குழு மறுத்தது. ஆனால் காந்தாரா 1 ஷூட்டிங் நடந்த 200க்கும் மேற்பட்ட நாட்களும் படக்குழுவினருக்கு சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்டதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் ஷிவானி!

வெண்ணிற உடையில் கவர்ச்சிப் பதுமையாய் போஸ் கொடுத்த ஜான்வி!

’காந்தாரா 1’ ஷூட்டிங்கின் அனைத்து நாட்களிலும் சைவ உணவு… படக்குழு செய்த செயல்!

காரில் இந்திய சினிமாவின் லோகோ.. ரேஸ் வெற்றிக்குப்பின் அஜித் நெகிழ்ச்சி!

இறுதிகட்ட ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’!

அடுத்த கட்டுரையில்
Show comments