Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் இந்திய சினிமாவின் லோகோ.. ரேஸ் வெற்றிக்குப்பின் அஜித் நெகிழ்ச்சி!

vinoth
திங்கள், 29 செப்டம்பர் 2025 (16:08 IST)
தன்னுடைய ‘குட் பேட் அக்லி’ படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு படம் மற்ற நாட்களில் கார் பந்தயம் என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கியுள்ளார். அதில் சமீபத்தில் தமிழகத்தின் ரேஸர் நரேன் கார்த்திகேயனும் இணைந்தார். தொடர்ந்து துபாய், ஜெர்மனி போன்ற நாடுகளில் பந்தயங்களில் கலந்துகொண்ட அஜித்குமார் அணி அடுத்து ஸ்பெயினில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டது.

இதில் அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இதன் பின்னர் பேசிய அஜித் “அடுத்த ரேஸில் இருந்து இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் லோகோவை எனது காரில் பொறிக்கப் போகிறேன். தற்போது மோட்டார் பந்தயங்களை எனது ரசிகர்களும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் அங்கமாக இருப்பதில் பெருமிதப் படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் பலி.. 15 சகோதரரும் பரிதாப மரணம்..!

கதறி அழுத பாரீஸ் ரசிகையை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய ஐஸ்வர்யா ராய்.. என்ன நடந்தது?

கரூர் துயர சம்பவம்.. தன் படத்தின் டீசர் அறிவிப்பு நிகழ்ச்சியை ரத்துசெய்த விஜய் சேதுபதி!

கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

டால்பி தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் ரிலீஸாகும் ‘பாகுபலி –தி எபிக்’!

அடுத்த கட்டுரையில்
Show comments