காந்தாரா படம் பெற்ற பெருவெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் காந்தாரா-1 உருவாகி ரிலீஸாகவுள்ளது. படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தில் காந்தாரா தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐந்து மொழிகளில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதையடுத்துப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி ஈடுபட்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் காந்தாராவுக்காக தான் ஐந்து ஆண்டுகள் செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். சமீபத்தில் நடந்த விளம்பரப் படப்பிடிப்பு ஒன்றின் போது அவருக்கு விபத்து ஏற்பட்டு ஓய்வில் இருந்து வந்தார். விபத்துக்குப் பின்னர் அவர் முதல் முதலாக கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது.