900 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய காந்தாரா-1… ஓடிடி ரிலீஸுக்குப் பிறகும் தொடரும் கலெக்‌ஷன்!

vinoth
ஞாயிறு, 9 நவம்பர் 2025 (13:51 IST)
காந்தாரா படம் அடைந்த இமாலய வெற்றியை அடுத்து மூன்று ஆண்டுகள் உழைப்பில் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘காந்தாரா 1’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த் மற்றும் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

காந்தாரா கதைக்களம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.  அதனால் அரங்க அமைப்பு முதல் ஆக்‌ஷன் காட்சிகள் வரை அந்த காலகட்டத்தில் எப்படி இருக்குமோ அப்படி பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனர் என்ற பாராட்டு படத்துக்குக் கிடைத்துள்ளது.

இதற்கிடையில் காந்தாரா 1 படம் தற்போது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 31 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீசானது. சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸானபோதும் தொடர்ந்து கணிசமான திரைகளில் ஓடிவருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி ஐந்து வாரங்களில் 883 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராஃப் படத்தில் காதல் என்பது வெறும் கருவிதான்… சேரன் கருத்து!

அனுபமா பரமேஸ்வரன் மார்பிங் படங்கள்: இணையவழி துன்புறுத்தலில் ஈடுபட்ட 20 வயது இளம்பெண்!

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமணம்… எப்போது தெரியுமா?

கமல் & அஜித் கூட்டணியில் ஒரு படம்… லோகேஷ் கனகராஜ் திட்டம்!

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘ரெட்ட தல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments