மீண்டும் தூசு தட்டப்படும் வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’… ரிலீஸ் அப்டேட்!

vinoth
ஞாயிறு, 9 நவம்பர் 2025 (13:47 IST)
சென்னை 28 படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கிய படம் பார்ட்டி. இதில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா  கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பார்ட்டிக்காகக்  களமிறங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. படத்தின் டீசர் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால் அதன் பிறகு படத்தைப் பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை.

அதனால் வெங்கட் பிரபுவும் மாநாடு படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் இப்போது பார்ட்டி படம் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘பார்ட்டி' படம் வெளியாகாமல் இருப்பது  மிகப்பெரிய ஏமாற்றம். படப்பிடிப்பு நடத்த கஷ்டமான இடங்களில் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்தோம். ஆனால், இன்னும் தணிக்கையைக் கூட படம் தாண்டவில்லை. படத்தின் பட்ஜெட் பெரியது என்பது ஓடிடி பிளாட்பார்ம்களில் வெளியிட முடியவில்லை.  ஆனால், விரைவில் பிரச்சினைகள் தீரும் என்று நம்புகிறேன்’ எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தூசு தட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்த பாடலை ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments