Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகமதாபாத் கோர விபத்து காரணமாக ‘கண்ணப்பா’ டிரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு!

Advertiesment
சிவன்

vinoth

, வெள்ளி, 13 ஜூன் 2025 (09:52 IST)
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள "கண்ணப்பா" திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று இந்தூரில் நடக்க இருந்தது. ஆனால் அகமதாபாத்தில் நேற்று நடந்த கோர விபத்துக் காரணமாக டிரைலர் வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டிரைலர் ரிலீஸ் நாளை நடக்கவுள்ளதாகவும் இன்று நடக்க ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி கைவிடப்படுவதாக விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கதையேக் கேட்காமல் அந்த படத்தில் நடிக்க ‘ஓகே’ சொன்னேன் –அமீர்கான் பகிர்ந்த தகவல்!