Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கங்கனாவுக்கு கொரோனா… குணமாயிடு கொரோனா – இணையத்தில் கேலி!

Advertiesment
கங்கனாவுக்கு கொரோனா… குணமாயிடு கொரோனா – இணையத்தில் கேலி!
, சனி, 8 மே 2021 (15:52 IST)
நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பலரும் அவரை கேலி செய்யும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையான கங்கனா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உள்ளார். வழக்கமாக இதுபோல பிரபலங்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு வந்தால் நம்பிக்கை அளிக்கும் விதமாக இணையங்களில் பதிவுகள் பகிரப்படும்.

ஆனால் கங்கனாவுக்கு நடப்பதோ தலைகீழாக உள்ளது. பலரும் get well soon corona, மற்றும் Be safe corona என்று ஹேஷ்டேக்குகளை போட்டு கங்கனாவை கேலி செய்யும் விதமாக பதிவிட்டு வருகின்றனர். ஏனென்றால் அம்மணியின் வரலாறு அப்படி. தனது டிவிட்டர் கணக்கில் இருந்து கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி எல்லோரிடமும் வம்பு வளர்த்து வந்தவர் கங்கனா. சமீபத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பரபரப்பு ஏற்பட்ட போது அரைவேக்காடு தனமான பதிவை பகிர்ந்திருந்தார். அந்த கோபத்தை எல்லாம் இப்போது இணையவாசிகள் திருப்பிக் கொடுக்கின்றனர்.

என்ன இருந்தாலும் சீக்கிரமே குணமாகி வாருங்கள் கங்கனா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!