Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது… ஜோதிகா பற்றி பேசிய கங்கனா ரனாவத்

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:57 IST)
சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடித்து வருகிறார்.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஜோதிகா பாலிவுட்டில் தனக்குப் பிடித்த நடிகை, கங்கனா ரனாவத் எனக் கூறி இருந்த நிலையில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள அவர், ஜோதிகா அளவுக்கு என்னால் நடிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பை இப்போது நான் நாள்தோறும் பார்த்து வருகிறேன்.  அவரின் நடிப்பு வியப்பளிக்கக் கூடிய ஒன்று. அவர் அளவுக்கு நடிப்பது என்பது சாத்தியமில்லாதது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஆண்டனின் ‘சக்தி திருமகன்’ ஐந்து நாட்கள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா ‘ஜனநாயகன்’ முதல் சிங்கிள் பாடல்!

மரணத்தின் அருகே சென்றுவந்தேன்… குடும்பத்தைக் கவனிக்கவில்லை –காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி!

5 நாளில் இவ்வளவுதான் வசூலா?.. கவினின் ‘கிஸ்’ பட நிலவரம்!

தமிழ்நாட்டில் 80 கோடி வசூலித்தால்தான் லாபமா?... கலக்கத்தில் ‘காந்தாரா-1’ விநியோகஸ்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments