Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரமுகி 2 கிளைமேக்ஸ் காட்சி பற்றிய அப்டேட் கொடுத்த கங்கனா!

சந்திரமுகி 2 கிளைமேக்ஸ் காட்சி பற்றிய அப்டேட் கொடுத்த கங்கனா!
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:26 IST)
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் கதாநாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சில நாட்கள் ஷூட்டிங்கில் அவர் கலந்துகொண்டார். முதல் பாகத்தில் எப்படி ஜோதிகாவின் நடனம் பேசப்பட்டதோ அதுபோல இந்த படத்திலும் கங்கனாவின் நடனம் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது கங்கனா பிரபல நடன வடிவமைப்பாளர் கலா மாஸ்டரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, க்ளைமேக்ஸ் காட்சிக்கான பாடல் நடன ஒத்திகை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் அப்படியேதான் இருக்கிறார்.. இயக்குனர் ஷங்கர் பற்றி வசந்தபாலன் எமோஷனல் பதிவு