ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் ஜெயிலர் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் இப்போது உருவாக்கத்தில் உள்ளன.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்போது ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இதே போல சில ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது.
அப்படி இரண்டு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸானால் 19 ஆண்டுகளுக்கு பின்னர் இருவர் படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. கடைசியாக சந்திரமுகி படமும் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.