Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வந்தும் லந்து கொடுக்கும் கங்கனா… இன்ஸ்டாகிராம் எடுத்த நடவடிக்கை!

Webdunia
திங்கள், 10 மே 2021 (15:30 IST)
நடிகை கங்கனா ரனாவத் தனக்கு கொரோனா இல்லை என்றும் சாதாரண காய்ச்சல்தான் என்றும் சொல்லி வருகிறாராம்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையான கங்கனா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உள்ளார். வழக்கமாக இதுபோல பிரபலங்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு வந்தால் நம்பிக்கை அளிக்கும் விதமாக இணையங்களில் பதிவுகள் பகிரப்படும்.

ஆனால் கங்கனாவுக்கு நடப்பதோ தலைகீழாக உள்ளது. பலரும் get well soon corona, மற்றும் Be safe corona என்று ஹேஷ்டேக்குகளை போட்டு கங்கனாவை கேலி செய்யும் விதமாக பதிவிட்டு வருகின்றனர். ஏனென்றால் அம்மணியின் வரலாறு அப்படி. தனது டிவிட்டர் கணக்கில் இருந்து கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி எல்லோரிடமும் வம்பு வளர்த்து வந்தவர் கங்கனா. சமீபத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பரபரப்பு ஏற்பட்ட போது அரைவேக்காடு தனமான பதிவை பகிர்ந்திருந்தார். அந்த கோபத்தை எல்லாம் இப்போது இணையவாசிகள் திருப்பிக் கொடுக்கின்றனர்.

ஆனால் இப்போது கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்திருப்பது கொரோனா தொற்று இல்லை என்றும் சாதாரண காய்ச்சல்தான் என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். ஆனால் இந்த பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. மறுபடியும் மறுபடியும் கொரோனா குறித்த தவறான தகவல்களை கங்கனா பரப்பி வருகிறார் என்று ரசிகர்கள் பொறுமையை இழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments