Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்‌ஷனில் இறங்கிய அமலா பால்… புதிய படத்தின் வைரல் போஸ்டர்!

ஆக்‌ஷனில் இறங்கிய அமலா பால்… புதிய படத்தின் வைரல் போஸ்டர்!
, செவ்வாய், 3 மே 2022 (08:55 IST)
அமலா பால் நடிப்பில் அதோ அந்த பறவை போல திரைப்படம் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் ஒரு படமாக ஆக்‌ஷன் கதையான ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் இப்போது வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவாக சமுத்திரக்கனி… ரஹ்மான் இசை…. உருவாகிறதா ‘மு க ஸ்டாலின்’ பயோபிக்!