Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

vinoth
புதன், 4 ஜூன் 2025 (15:00 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்'  படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடந்தது. அதில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பாடகர்களால் மேடையில் பாடப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘அஞ்சு வண்ணப் பூவே’, ‘விண்வெளி நாயகா’ மற்றும் ‘முத்த மழை’ போன்ற பாடல்கள் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளன.

இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் “தமிழ் சினிமாவையேப் புரட்டிப் போடும் படம் எடுக்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இப்போது சர்வதேச தரத்தில் ‘தக்லைஃப் ‘ படம் உருவாகியுள்ளது. மணிரத்னத்துடன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து பணியாற்றியது குதூகலமாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ரவீனாவின் வேட்புமனு நிராகரிப்பு!

தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்த பிரதீப் ரங்கநாதன் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

கிளாமர் உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் புகைபடத் தொகுப்பு!

வித்தியாசமான உடையில் க்யூட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments