Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 பட ஷுட்டிங்கை நிறைவு செய்த கமல்....ரிலீஸ் எப்போது?

indian 2
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (13:34 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவரது இந்தியன் 2  படத்தின் புதிய தகவல் வெளியாகிறது.
 
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படம்  ’இந்தியன் 2’. 
 
இப்படம் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பல  பிரச்சனைகளை எல்லாம் கடந்து,  மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
 
இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை தயாரிப்பு  நிறுவனம் எடுத்துள்ளது.
 
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்புகள்தான் காரணம்.
 
இந்த நிலையில்,  இந்தியன் 2 படத்தில் நடிகர் கமலின் எஞ்சியுள்ள காட்சிகளுக்கான ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அதேபோல் இப்படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குமரி மண்ணின் மணம் கமழும் "கும்பாரி"! - திரை விமர்சனம்