Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு வழியாக முடிந்த இந்தியன் 2 ஷுட்டிங்… படக்குழு கொண்டாட்டம்!

ஒரு வழியாக முடிந்த இந்தியன் 2 ஷுட்டிங்… படக்குழு கொண்டாட்டம்!
, சனி, 30 டிசம்பர் 2023 (07:03 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது. இப்போது ஆந்திராவில் இந்தியன் 2 ஷூட்டிங் நடந்து வருகிறது.

இப்போது விறுவிறுப்பாக இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் அமைத்து எடுக்கப்பட்டது. இப்போது அந்த ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் இந்தியன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதை படக்குழு கொண்டாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவசி படத்துக்கு வசனம் எழுதியது சீமான்தான்… இயக்குனர் உதயசங்கர் பகிர்ந்த தகவல்!