Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசிகர்களுக்காக கமல்ஹாசன் எழுதிய “மய்யம்” புத்தகம்! – சென்னை புத்தக கண்காட்சியில் வெளியீடு!

Maiyyam
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (09:46 IST)
பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்காக எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “மய்யம்” என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது.



பிரபல தமிழ் நடிகரான கமல்ஹாசன், நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல்துறை வித்தகராக விளங்குபவர். 1980 களில் பத்திரிக்கை துறையிலும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தவர்தான் கமல்ஹாசன். அந்த சமயத்தில் இவர் எழுதி வந்த கதைத்தொடரான “தாயம்” என்ற நாவலைதான் பின்னாளில் “ஆளவந்தான்” என்று படமாக எடுத்தார்.

1987ல் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்காக ”மய்யம்” என்ற பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அதில் திரைப்பட ரசிகர்களின் அறிவுத்தேடலையும், ரசனையையும் மேம்படுத்தும் விதமாக பல வெளிநாட்டு திரைப்படங்கள், புத்தகங்கள் குறித்தும், சமுதாய முன்னேற்றம் குறித்தும் பல கட்டுரைகளை எழுதி வந்தார்.

சுமார் 36 வருடங்கள் கழித்து அவர் எழுதிய அந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மீண்டும் “மய்யம்” என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. செல்வேந்திரன் இந்த கட்டுரைகளை தொகுத்துள்ளார். நாளை தொடங்க உள்ள சென்னை புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் வெளியாகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் வெற்றிமாறனின் விடுதலை திரைக்கதை புத்தகம்!