Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெச் வினோத்தை டீலில் விட்ட கமல்ஹாசன்… அடுத்த படம் இவருடன்தான்!

ஹெச் வினோத்தை டீலில் விட்ட கமல்ஹாசன்… அடுத்த படம் இவருடன்தான்!
, செவ்வாய், 21 மார்ச் 2023 (08:49 IST)
ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கமல் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படமாக மணிரத்னம் இயக்கும் படத்தில்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஹெச்  வினோத் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை தொடங்குவதா இல்லை யோகி பாபு படத்தை தொடங்குவதா என்ற யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரு மொழிகளில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்!