Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்மவீரர் காமராஜருக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!

Advertiesment
கர்மவீரர் காமராஜருக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!
, புதன், 15 ஜூலை 2020 (11:41 IST)
கர்மவீரர் காமராஜருக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!
கர்ம வீரர் என்றும் இந்தியாவின் கிங்மேக்கர் என்றும் இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கி புக பெற்றருமான காமராஜர் அவர்களின் 118 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உண்மையான பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து பொதுமக்களும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் உலகநாயகன் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் காமராஜர் பிறந்த நாள் குறித்து தனது டுவிட்டரில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல், தனக்கான பொறுப்பாக பார்த்தவர். மக்களின் தேவைகளையும், வலிகளையும் அறிந்து செயலாற்றுவதே முக்கியம் என நடைமுறையில் செயல்படுத்தியவர் கர்மவீரர் நம் காமராஜர். அவர்தம் பிறந்த நாளில் இன்று போல் என்றும் மக்கள் நலனை முதன்மையாய் வைத்திடுவோம் என உறுதியேற்போம்’
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பஹத் பாசில் – மீண்டும் இணையும் சூப்பர் டீலக்ஸ் கூட்டணி!