உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைதளமான டுவிட்டரில் ஆவேசமான கருத்துக்களை கூறி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழக அரசு எடுக்கும் சொதப்பலான நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டி அவற்றை ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டியது எப்படி என்பது குறித்த அறிவுரைகளையும் அவர் கூறிவருகிறார்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டு, அந்த அறிவிப்பை திடீரென வாபஸ் பெறும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன இதுகுறித்து சுட்டிக்காட்டிய நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இது குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார் என்பதும் இந்த டுவிட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது