Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜமௌலி படத்தில் கமல் ஹீரோ இல்லையாம்… வெளியான தகவல்!

Advertiesment
அமெரிக்கா
, வெள்ளி, 6 ஜனவரி 2023 (14:50 IST)
சமீபத்தில் கமல் மற்றும் ராஜமௌலி சந்தித்து ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது இந்த படம். இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான போட்டி பிரிவில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ராஜமௌலி, கமல் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் இணையும் படத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் பாசிட்டிவ்வான முறையில் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் அந்த படத்தில் கமல் ஹீரோவாக இல்லாமல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. வழக்கமாக ராஜமௌலி ஆஜானுபாகுவான இளம் கதாநாயகர்களைதான் தன்னுடைய கதாநாயகர்களாக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜ்த் 62 படம் மூலம் காமெடியனாக ரி எண்ட்ரி கொடுக்கிறாரா சந்தானம்?