கமல் பிறந்தநாளில் தொடங்கும் அன்பறிவ் படத்தின் ஷூட்டிங்!

vinoth
செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (09:55 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்'  படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகி அட்டர் ப்ளாப் ஆனது. இதையடுத்து கமல்ஹாசன் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் தக் லைஃப் படத்தின் தோல்வி மற்றும் கமல்ஹாசன் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றது போன்ற காரணங்களால் தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் திரைக்கதையை செப்பனிடும் பணிக்காக  மலையாள சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்துள்ளார். இவர் திரைக்கதையில் உருவான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ மற்றும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷ்யாம் புஷ்கரனோடு இணைந்து தற்போது அன்பறிவ் திரைக்கதை இறுதியமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்களாம். திரைக்கதைப் பணிகள் முடிந்ததும் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளன்று படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments