மார்கோ இரண்டாம் பாகத்தில் ஹீரோவாகிறாரா யாஷ்?

vinoth
செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (09:49 IST)
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது உன்னி முகுந்தன் நடித்த ‘மார்கோ’ திரைப்படம். அந்த படத்தின் வன்முறைக் காரணமாக அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், அந்த படத்துக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கவே செய்கிறது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் ‘மார்கோ 2’ எப்போது வரும் என அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்து வருகின்றன. அப்படி ஒரு ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த உன்னி முகுந்தன் “அந்த படத்தை எடுக்கும் திட்டத்தை நான் கைவிட்டு விட்டேன். அந்த படத்தைச் சுற்றி நிறைய நெகட்டிவிட்டி உள்ளது. ” எனக் கூறியிருந்தார்.

ஆனால் தயாரிப்பு நிறுவனமான க்யூப்ஸ் நிறுவனம் “மார்கோ 2  பற்றிய பேச்சுவார்த்தை இன்னும் முடிவு பெறவில்லை. அதனால் மார்கோ 2 கண்டிப்பாக வரும். அதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நம்புகிறோம்” எனக் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது மார்கோ இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளது. ‘லார்ட் மார்கோ’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ள நிலையில் அதில் உன்னி முகுந்தன் பெயரோ , இயக்குனர் பெயரோ இடம்பெறவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தில் உன்னி முகுந்தன் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையில் தற்போது ‘லார்ட் மார்கோ’ படத்தில் யாஷை கதாநாயகனாக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. கேஜிஎஃப் படம் மூலமாக பேன் இந்தியா ஹீரோவாகியுள்ள யாஷ் தற்போது ‘டாக்ஸிக்’ மற்றும் ‘ராமாயண்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments