Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!
, திங்கள், 20 செப்டம்பர் 2021 (09:06 IST)
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளம் இசைப்புயல் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’ 
 
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது என்பது தெரிந்ததே. 
 
இதனையடுத்து இன்று முதல் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் காரைக்குடியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது என்றும் இந்த படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடைபெறும் என்றும் கூறப் படுகிறது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனின் பகுதியை முடித்து விட வேண்டும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை நந்திதா வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!