சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் முதன் முதலான போட்டியிட்ட கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கி பிரச்சாரம் செய்தார்.
சமீபத்தில் அவரது கட்சியில் இருந்து நடிகர் நாசரின் மனைவி கமிலா நாசர் விலகினார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தன்னாட்சியில் என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கருத்தரங்கு நடத்தினா கமல்ஹாசன்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் கடந்த 35 ஆண்டுகளாகவே சொல்லிவருகிறேன் சாதனை என்பது செயலே ஆகும். நாட்டிலுள்ள மோசமான ஆட்சியாளர்களால்தான் சட்டம் மீறப்படுகிறது. நீங்கள் இக்கட்சியில் சேர வேண்டுமென்பதில்லை; ஆனால் விமர்சித்தும் கட்சிக்கு உதவுகின்ற வேலையைச் செய்தாலேபோதும். இந்தக் கட்சியில் எல்லாமே சரியென்று நான் சொல்லவில்லை இங்குள்ள குறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மேலும் தலைவர்களை நான் தேடிக் கொண்டிருகிறேன். அதேசமயம் தகுதியில்லாதவர்களை நீக்குவது எனது கடமை எனத் தெரிவித்தார்.