Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக பொருளாளர் துரைமுருகன் நலம்பெற வாழ்த்திய கமல்ஹாசன்

Advertiesment
திமுக பொருளாளர் துரைமுருகன்  நலம்பெற வாழ்த்திய கமல்ஹாசன்
, வியாழன், 8 ஏப்ரல் 2021 (22:59 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவில் இந்த்த் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ராதிகா சரத்குமார் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;

முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான்  உள்பட.
திமுக பொதுச்செயலாளர் நண்பர் துரைமுருகன் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்.

 (கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மாஸ்டர் ’’ பட நடிகருக்கு கார் பரிசளித்த லோகேஷ் கனகராஜ்